7.11.08

என்ன பேசலாம்?



என்ன பேசலாம்?
நேற்றிரவு பார்த்த திரைப்படம்
புதிதாய் வாங்கிய பட்டுப்புடவை
காலையில் படித்த நாளிதழ் செய்தி
அடுத்தவாரம் போகவிருக்கும் சுற்றுலா...
அழைப்பின் காரணம் உன்
குரல் கேட்பதாய் மட்டும் இருந்தாலும்
இப்ப‌டி எதயாவ‌து யோசித்துக் கொண்டேன்
உன்னிட‌ம் பேச‌...
பத‌ற்ற‌ம்.... த‌ய‌க்க‌ம்... ப‌ய‌ம்...
எல்லாவ‌ற்றையும் க‌ட‌ந்து உன் எண்க‌ளை அழுத்த‌
ம‌றுமுனையில் உன் குர‌ல்
"தூங்கிட்டு இருக்கேன். அப்புற‌ம் பேசு"

0 comments:

Post a Comment