
10.11.08
பதில் என்ன?

9.11.08
காதல் அழிவதில்லை

அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை . உடல் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது .
"நான் சொன்ன வேலையை செய்யலைனா என் வார்த்தைக்கு மரியாதை இல்லைன்னு அர்த்தம். என் வார்த்தைக்கு மரியாதை இல்லேன்னா எனக்கும் மரியாதை இருக்காது. மரியாதை இல்லாத இடத்துல நான் இருக்க மாட்டேன் ." அருண் பேசிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் பேசிய வார்த்தைகள் அவள் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.
மீனு வீட்டை எதிர்த்து அருணை காதலித்து கரம் பிடித்து இப்போது அமெரிக்கா வந்து கிட்ட தட்ட ஏழு மாதங்கள் இருக்கும்.
இந்த ஏழு மாதங்களில் காதல் கசந்து விட்டதா ? மீனு குழம்பினாள்.
அருண் வரும் நேரம் ஆனது. தினமும் மாலை இருவரும் வெளியே நடந்து செல்வது வழக்கம். மீனு கிளம்பி இருந்தாள்.
அருண் அலுவலகம் முடிந்து வந்தான். மீனு காபி டம்ளரை கொண்டு வந்து அருணிடம் நீட்டினாள். அவனும் வாங்கிக் கொண்டான்.
மௌனம் நீடித்தது.
வெளியே கிளம்பினர். இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
அது ஒரு அழகிய இடம். நீண்ட குறுகிய சாலையின் இரு பக்கங்களிலும் பசுமையான மரங்கள். லேசாக மழை தூறியது. மீனு இயற்கையின் அழகை ரசிப்பவள். அதை கண்டு வியப்பவள்.
ஆனால் இன்று அவளால் ரசிக்க முடியவில்லை. அவள் மனம் கனத்திருந்தது. அருண் ஒரு வார்த்தை பேச மாட்டனா என மனம் துடித்தது.
மெதுவாக அவன் கையை பற்றினாள். அருண் முகத்தில் எவ்வித சலனமும் தெரியவில்லை.
ஆனால் அவன் மனதில் ஒரு ரசாயன மாற்றமே நடந்தது. குற்ற உணர்ச்சி அவனை குறுகச் செய்தது. வீட்டை எதிர்த்து தன்னையே நம்பி வந்தவளிடம் தான் அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என வருந்தினான். இருந்தாலும் அவனின் ஆண் மனம் அவனை பேச அனுமதிக்கவில்லை .
மீனு மெதுவாக அவன் தோளில் சாய்ந்தாள். அந்த கணத்தில் அவன் முழுவதுமாக உருகிப்போனான்.
மீனுவின் கையிலிருந்து தன் கையை விடுவித்து அவள் தோளில் வைத்தான்
"மீனு பேபி சாரி டா... நான் அப்படி பேசியிருக்க கூடாது. கோபத்துல பேசிட்டேன். சாரி மா.... ஐ லவ் யூ சோ மச்..." அவள் முகம் பார்க்கவே அருணுக்கு வெட்கமாக இருந்தது.
"பரவாயில்லை அருண்.... என் மேல் கோபப்படுற முழு உரிமையும் உங்களுக்கு இருக்கு. "-மீனு.
இருவரும் சந்தோசமாக பயணத்தை தொடர்ந்தனர்.
மறப்பதும் மறுப்பதும்

அடை மழைக் குளிரிலும்
இறுக்கி அணைத்துக் கொன்டு
8.11.08
7.11.08
தற்கொலை
என்ன பேசலாம்?







