Friday, April 20, 2018

கர்மாவை சுமக்கும் வாகனங்கள் !!!

கர்மாவை(karma)  சுமக்கும் வாகனங்கள் !!!

                                                நம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..? 
புண்ணியங்களையா ..?பாவங்களையா ..........?

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...! நாமோ நமது முன்னோர்களின்
கர்மாவை சுமக்கிறவர்கள்...!! ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றிதோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.
நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லைஎன்ற கற்பனையில் நீ உலாவ ..உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்காத்திருப்பான் காலத் திற்காக ..தக்க தருணத்தில் வெளியிடுவான் ..அதை நீ அனுபவிக்க ...என்பதே மெய்ஞ்ஞானம்.
நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...!

நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :
பட்டினியால் வருந்தும்ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் ......................................3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ................................5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் ...................................................5 தலைமுறைக்கு
.ஏழைப்பெண்ணுக்குதிருமணம் செய்வித்தல் .....5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்குஉதவுவது ......................6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் ...................................7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்குஅந்திம கிரியை செய்தல் ....9 தலைமுறைக்கு
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்

Tuesday, April 3, 2018

நிம்மதி எங்கே இருக்கிறது....???????

நிம்மதி எங்கே  இருக்கிறது....???????
-------------------------------------------

ஒரு  மனிதன்....

எந்தக்  குறையும் இல்லை அவனுக்கு...

ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.

படுத்தால் தூக்கம் வரவில்லை... சிரமப்பட்டான்...

அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.

"பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... போய்ப் பாருங்கள்!"

ஆசிரமத்துக்குப்  போனான்...

பெரியவரைப் பார்த்தான்.

"ஐயா.... மனசுலே நிம்மதி இல்லே... படுத்தா தூங்க முடியலே!"

அவர் நிமிர்ந்து பார்த்தார்...

"தம்பி... உன் நிலைமை எனக்குப் புரியுது...

இப்படி வந்து உட்கார்!"

பிறகு அவர் சொன்னார்:

"உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது...
தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!"

"அது எப்படிங்க?"

"சொல்றேன்...
அது மட்டுமல்ல...
மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும்
இன்னொரு காரணம்!"

"ஐயா... நீங்க சொல்றது எனக்கு புரியலே!'

"புரியவைக்கிறேன்....
அதற்கு முன் ஆசரமத்தில்
விருந்து சாப்பிடு."

வயிறு நிறையச் சாப்பிட்டான்.

பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி,
"இதில் படுத்துக்கொள்" என்றார்.

படுத்துக் கொண்டான்...

பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...

கதை இதுதான்:
ரயில் புறப்படப் போகிறது... அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து  ஏறுகிறான்...
அவன் தலையில் ஒரு மூட்டை...

ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.

ரயில் புறப்பட்டது...

தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...

எதிரே இருந்தவர் கேட்கிறார்:
"ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே?
இறக்கி வையேன்!"

அவன் சொல்கிறான்:
"வேணாங்க! ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்!
என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'

பெரியவர் கதையை முடித்தார்.

படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறே?"

"பைத்தியக்காரனா இருக்கானே...

ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?"

"அது அவனுக்கு தெரிய வில்லையே"

"யார் அவன்?"-இயல்பாக கேட்டான்

"நீதான்!"

"என்ன சொல்றீங்க?"

பெரியவர் சொன்னார்:
"வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான்...

பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்
நிம்மதியாக வாழமுடியாது.
தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!"

அவனுக்கு தனது குறை மெல்லப் புரிய ஆரம்பித்தது...
சுகமாக தூக்கம் வந்தது.

தூங்க ஆரம்பித்து விட்டான்... கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.

"எழுந்திரு" என்றார்

எழுந்தான்!

"அந்த தலையணையைத்  தூக்கு!" என்றார்.

தூக்கினான்...
அடுத்த கணம்"ஆ"வென்று
அலறினான்.

தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது

"ஐயா! என்ன இது?"

"உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு... அப்படி இருந்தும்
நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!

அது ... அது எனக்குத் தெரியாது...

"பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!"

அவன் புறப்பட்டான்,, "நன்றி பெரியவரே...
நான் போய் வருகிறேன்!"

"நிம்மதி எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாயா?

"புரிந்து கொண்டேன்!"
என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது.

அறிவின் வெளிச்சத்தால்
அதைக் தேடிக் கண்டு பிடித்து விட்டேன்...!"

தோற்க கற்றுக் கொள்வோம்

தோற்க கற்றுக்கொள்வோம் என்ன  இது புதுசா இருக்கு?   எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்...